எழுப்புதலை பெற நாம் செய்ய வேண்டியவை 👉இரட்சிக்கப்பட்டு மறுபடியும் பிறந்த அனுபவம் உள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனும் 1) பாவ வாழ்க்கை 2) பின்மாற்றம் 3)ஆவிக்குரிய குளிர்ந்த நிலைமை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். 👉 உலகத்தில் உள்ள அனைத்து காரியங்களை காட்டிலும் ஒவ்வொரு நாளும் தேவனை அதிகம் நேசிக்க வேண்டும். அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான். எழுப்புதல் அடைந்த கிறிஸ்தவன் மட்டுமே கணவன், மனைவி, பிள்ளைகள் பெற்றோர்கள் இன்னும் மற்ற உலக காரியங்களைவிட, தன் முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு பெலத்தோடும் தேவனை நேசிக்க முடியும். 👉அனுதினமும் வேதம் வாசிக்க வேண்டும், எழுப்புதல் அடைந்த இருதயம் வேதவசனத்தில் களிகூரும், ஆனால் குளிர்ந்த இருதயமோ இயந்திரத்தைப் போலிருக்கும். 👉 அனுதினமும் ஜெபிக்க வேண்டும், எழுப்புதல் அடைந்தவரின் ஜெபம், பிறரை உலுக்குவதாக இருக்கும், அந்த ஜெபங்கள் தேவனின் ச...
எழுப்புதல் எப்போது தேவை? நமக்குள் எழுப்புதல் வேண்டுமா? இல்லையா? என்பதை நாம் எப்படி தெரிந்து கொள்வது? 👉 விசுவாசிகளாகிய நாம் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பு குறையும்போது, எழுப்புதல் தேவை. 👉 கசப்பு, பொறாமை, விரோதம், புறங்கூறுதல் இவைகள் பெருகி இருப்பின், நிச்சயம் எழுப்புதல் அவசியம். 👉 உலகப் பிரகாரமான வாழ்க்கையில் அதிக ஈடுபாடு இருப்பின் எழுப்புதல் தேவை. உதாரணம்: அதிக நேரம் டி.வி பார்ப்பது, வேதத்தை வாசிக்காமல் பிற புத்தங்களை வாசிப்பது, அதிக நேரம் தூங்குவது, சினிமா பார்ப்பது, அரட்டை அடிப்பது, கேளிக்கை விடுதிகள், விளையாட்டு அரங்குகள், இவைகளால் அதிகம் ஈர்க்கப்படுதல், பொய் சொல்லுதல் புறங்கூறுதல், திருடுதல், கீழ்படியாமை அதிகம் இருந்தால் எழுப்புதல் தேவை 👉 தேவனை ஆராதிப்பது, தேவனுக்கென்று நேரம் செலவழிப்பது மிகக் குறைவாக இருக்கும்போது எழுப்புதல் தேவை. 👉 சின்ன, பெரிய, மறைமுகமான, வெளியரஙடகமான பாவங்கள். பொய் கூறுதல், பொறாமை, கசப்பு, விரோதம், பகைமை, வைராக்கியம், கோபம், சண்டை, சபித்தல், வாக்குவாதம், மாய்மாலம், அவிசுவாசம், கவலை, குடிவெறி, புகை, போதை பொர...