🔍அசூசா தெரு எழுப்புதல் - Azusa Street Revival
1906-ம் ஆண்டு, அசூசா தெரு எழுப்புதல் ஏற்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, உலக முழுவதிலும் இருந்து மக்கள் திரண்டு வந்து, ஜெபிக்கவும், கர்த்தரைத் தேடவும், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறவும், அந்நிய பாஷைகளில் ஜெபிக்கவும் தொடங்கினர். அநேக அற்புதங்கள் நடந்தன. விசுவாசிகள் இந்த எழுப்புதல் அக்கினியை தங்கள், தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் சென்றனர், ஆங்கேங்கே பெந்தேகோஸ்தே எழுப்புதல் வேகமாகப் பரவியது. ஆதை தொடர்ந்து சுகமளிக்கும் எழுப்புதல், மற்றும் அநேக தீர்க்கதரிசன ஊழியங்கள், விசுவாச ஊழியங்கள் மூலம் பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் வளர்ச்சி அடைந்தன.
🔍சுகமளிக்கும் எழுப்புதல்
1920-ம் ஆண்டு, அலெக்சாண்டர் டூவி அவர்கள் முலம் ஒரு பெரிய சுகமாளிக்கும் எழுப்புதல் ஏற்ப்பட்டது. இவர் சுகம் அளிக்கும் எழுப்புதலின் தந்தை என்று அழைக்கப்பட்டார். இவர் சீயோன் என்னும் சுகம் அளிக்கும் மையம் ஒன்றை நிறுவினார். இதிலிருந்து மிகவும் பிரசித்தி பெற்ற சுகமளிக்கும் ஊழியர்கள் தோன்றினர். அவர்களில் சிலர் போஸ் டவுன், ஜான ஜி லேக், ரேமான்ட் ரிச்சி, ஸ்மித் விக்ள்ஸ் வோர்த் மற்றும் ஏமி சிம்புள் மேக் ஃபெர்சன் ஆவார்.
🔍 1947 முதல் 1952 வரை பெரிய கூடாரங்கள் அமைக்கப்பட்டு,
மிக பெரிய
அளவில் மாலை இரவு கூட்டங்கள் ஆங்காங்கே அமெரிக்கா தேசத்தில் நடைபெற ஆரம்பித்தன. வில்லியம் பிரன்ஹாம், கார்டன் லின்ட்சே, ஓரல் ராபர்ட்ஸ், மற்றும் ஏ.ஏ. ஆலன் போன்ற பிரபலமான எழுப்புதல் வீரர்கள் இந்நாட்களில் தேன்றினர்.நடன அரங்குகளும், விடுதிகளும், தேவ வசனத்தால் நிரப்பபட்டன. பரிசுத்த ஆவியானவரின் வரங்களை குறித்தும், அந்நிய பாஷைகள் பேசுவதை குறித்தும் அனைத்து சபை பிரிவினருக்குள்ளும் பெரிய வெளிப்பாடு உண்டானது.
பெந்தேகோஸ்தே அனுபவமானது, வெகு சிக்கிரத்தில் பாப்திஸ்து, மெதடிஸ்ட் மற்றும் கத்தோலிக்க சபைகளுக்குள் செல்ல ஆரம்பித்தது. ஆந்நிய பாஷை போசுவதிலும் ஆவிக்குரிய வரங்களை நாடுவதிலும் இவர்கள் ஆர்வம் காண்பித்தனர்.
இயேசு கிறிஸ்து சுகம் அளிப்பவர், இரட்சகர் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிப்பவர் என்பதை எல்லோரும் அவ்எழுப்புதலின்
முலம் கண்டு கொண்டனர். இன்று பெந்தேகோஸ்தே எழுப்புதல் தொடந்து உலகமெங்கும் நடைபெற்று கொண்டிருக்கிறது.
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்
அவர்கள் திருப்தியடைவார்கள். மத்தேயு 5:6
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்போழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன்.
Comments
Post a Comment