எழுப்புதலை பெற நாம் செய்ய வேண்டியவை

1) பாவ வாழ்க்கை
2) பின்மாற்றம்
3)ஆவிக்குரிய குளிர்ந்த நிலைமை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
👉 உலகத்தில் உள்ள அனைத்து காரியங்களை காட்டிலும் ஒவ்வொரு நாளும் தேவனை அதிகம் நேசிக்க வேண்டும்.
அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.

👉அனுதினமும் வேதம் வாசிக்க வேண்டும், எழுப்புதல் அடைந்த இருதயம் வேதவசனத்தில் களிகூரும், ஆனால் குளிர்ந்த இருதயமோ இயந்திரத்தைப் போலிருக்கும்.
👉 அனுதினமும் ஜெபிக்க வேண்டும், எழுப்புதல் அடைந்தவரின் ஜெபம், பிறரை உலுக்குவதாக இருக்கும், அந்த ஜெபங்கள் தேவனின் சிங்காசனத்தை தொடுவதாக இருக்கும்.

👉 ஒழுக்கமான வாழ்க்கை
ஆவிக்குரிய வாழ்வி;ல் மட்டும் அல்ல வாழ்வின் எல்லா பகுதிகளிலும் ஒழுங்கு காணப்பட வேண்டும். மேலும், சாட்சியில்லாத வாழ்க்கை, ஜெபமில்லாத வாழ்க்கை பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்துதல், பரிசுத்த ஆவியை அணைத்துப் போடுதல், சிற்றின்பப் பிரியராக உலகப் பிரகாரமாக வாழ்வது போன்றவைகளிலிருந்து விடுதலை பெறவேண்டும்.👉 ஆத்தும ஆதாயம் செய்ய வேண்டும், நரகத்திற்க்கு செல்லும் மக்களை குறித்து பாரம் நமக்கு வேண்டும். எழுப்புதல் அடைந்த கிறிஸ்துவ விசுவாசி, அதிக ஆத்ம பாரம் உடையவனாய் இருப்பான். பின்மாற்றமடைந்த கிறிஸ்தவன், பாவத்தில் மக்கள் நரகத்திற்குப் போனாலும் அதைக் குறித்து கவலைப்படவே மாட்டான்.
👉இதை வாசிக்கும் அன்பு சகோதரனே! சகோதரியே!

Comments
Post a Comment