எழுப்புதல் என்றால் என்ன?
என்பதையும், அதை குறித்த ,விளக்கங்களையும் கடந்த
அத்தியாயத்தில் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் எழுப்புதல்
ஏற்படும்போது நடைபெறும் விளைவுகள் என்ன? என்பதை சில சரித்திர உதாரணங்களோடு நாம் காணலாம்.
🌍 வேல்ஸ் தேச எழுப்புதல் (1904 - 05)
⭐ இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் தேசத்தில் எழுப்புதல் ஏற்பட்ட போது, எழுப்புதல் அடைந்தவர்கள் எங்கும் சென்று பிரசங்கம் செய்தார்கள்.
⭐ சினிமா, நடன, விளையாட்டு அரங்குகள், மக்கள் செல்லாதால் மூடப்பட்டன.
⭐ சமுதாயத்தில் குற்றங்கள்
குறைந்ததால், காவலருக்கு (Police) வேலையில்லா நிலைமஏற்பட்டது.
🌍 கென்டக்கி எழுப்புதல், அமெரிக்கா (1800)
⭐ அமெரிக்கா
தேசத்தில் உள்ள
கென்டக்கியில் எழுப்புதல்
ஏற்பட்டபோது அடிமைத்தனம்
ஒழிக்கப்பட்டது. எழுப்புதல்
வீரர்களால் 600க்கும் மேற்பட்ட கல்லூரிகள் நிறுவப்பட்டன.
🌍ஹெப்ரைடஸ் எழுப்புதல் - (Hebrides)
⭐ இங்கிலாந்தில் உள்ள ஹெப்ரைடஸ் தீவுகளில் எழுப்புதல் ஏற்பட்ட போது
ஜனங்கள், தேவ பிரசன்னத்தை சபைகளில் மட்டும் அல்லாமல் எல்லா
இடங்களிலும் உணர்ந்தனர்.
🌍ஆப்பிரிக்க எழுப்புதல்
⭐ ஆப்பிரிக்க தேசத்தில் எழுப்புதல் ஏற்பட்டபோது தேசமெங்கும் மக்கள் அதிகமாகப் பாவ உணர்வு அடைந்து தங்கள் பாவங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டனர்.
🌍 சீன எழுப்புதல்
⭐ சீன தேசத்தில் எழுப்புதல் ஏற்பட்டபோது, சபைகள் மற்றும் மிஷனரி
அமைப்புகளுக்குள் ஒற்றுமை ஏற்பட்டது. ஒருவரையொருவர் மன்னித்தனர்.
🌍 மொரேவியாவில் எழுப்புதல் (ஆழசயஎயை) 1727-1827
மிஷனரி ஸ்தாபனங்கள் தோன்றின. 1727-ல்
ஆரம்பிக்கப்பட்ட ஜெபக்கூட்டங்கள் 1827 வரை
அதாவது 100 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது.
இதன் விளைவாக 30 ஆண்டுகளில் மிஷனரி
ஸ்தாபனங்கள் ஐரோப்பா, அமெரிக்கா,
ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளுக்கு
சுவிஷேத்தை எடுத்து சென்றது.
Comments
Post a Comment