Skip to main content

Posts

Showing posts from March, 2019
எழுப்புதலை பெற நாம் செய்ய வேண்டியவை 👉இரட்சிக்கப்பட்டு மறுபடியும் பிறந்த அனுபவம் உள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனும் 1) பாவ வாழ்க்கை 2) பின்மாற்றம் 3)ஆவிக்குரிய குளிர்ந்த நிலைமை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். 👉 உலகத்தில் உள்ள அனைத்து காரியங்களை காட்டிலும் ஒவ்வொரு நாளும் தேவனை அதிகம் நேசிக்க வேண்டும். அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான். எழுப்புதல் அடைந்த கிறிஸ்தவன் மட்டுமே கணவன், மனைவி, பிள்ளைகள் பெற்றோர்கள் இன்னும் மற்ற உலக காரியங்களைவிட, தன் முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு பெலத்தோடும் தேவனை நேசிக்க முடியும். 👉அனுதினமும் வேதம் வாசிக்க வேண்டும், எழுப்புதல் அடைந்த இருதயம் வேதவசனத்தில் களிகூரும், ஆனால் குளிர்ந்த இருதயமோ இயந்திரத்தைப் போலிருக்கும். 👉 அனுதினமும் ஜெபிக்க வேண்டும், எழுப்புதல் அடைந்தவரின் ஜெபம், பிறரை உலுக்குவதாக இருக்கும், அந்த ஜெபங்கள் தேவனின் ச...
எழுப்புதல் எப்போது தேவை?  நமக்குள் எழுப்புதல் வேண்டுமா? இல்லையா? என்பதை நாம் எப்படி தெரிந்து கொள்வது? 👉 விசுவாசிகளாகிய நாம் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பு குறையும்போது, எழுப்புதல் தேவை. 👉 கசப்பு, பொறாமை, விரோதம், புறங்கூறுதல் இவைகள் பெருகி இருப்பின், நிச்சயம் எழுப்புதல் அவசியம். 👉 உலகப் பிரகாரமான வாழ்க்கையில் அதிக ஈடுபாடு இருப்பின் எழுப்புதல் தேவை. உதாரணம்:  அதிக நேரம் டி.வி பார்ப்பது, வேதத்தை வாசிக்காமல் பிற புத்தங்களை வாசிப்பது, அதிக நேரம் தூங்குவது, சினிமா பார்ப்பது, அரட்டை அடிப்பது, கேளிக்கை விடுதிகள், விளையாட்டு அரங்குகள், இவைகளால் அதிகம் ஈர்க்கப்படுதல், பொய் சொல்லுதல் புறங்கூறுதல், திருடுதல், கீழ்படியாமை அதிகம் இருந்தால் எழுப்புதல் தேவை 👉 தேவனை ஆராதிப்பது, தேவனுக்கென்று நேரம் செலவழிப்பது மிகக் குறைவாக இருக்கும்போது எழுப்புதல் தேவை. 👉 சின்ன, பெரிய, மறைமுகமான, வெளியரஙடகமான பாவங்கள். பொய் கூறுதல், பொறாமை, கசப்பு, விரோதம், பகைமை, வைராக்கியம், கோபம், சண்டை, சபித்தல், வாக்குவாதம், மாய்மாலம், அவிசுவாசம், கவலை, குடிவெறி, புகை, போதை பொர...
  தனி நபரின்  எழுப்புதல்                                                இது வரை எழுப்புதல் என்றால் என்ன என்பதை பற்றி கற்று கொண்டோம். திருச்சபையிலும், குடும்பத்திலும் எழுப்புதல் ஏற்படுவதற்கு முன்பாக, எழுப்புதலானது முதலாவது ஒரு தனிப்பட்ட மனிதனுக்குள் ஏற்படுகிற. ஒரு தனி மனிதனுக்குள் ஏற்படும் இந்த எழுப்புதல் அவனது குடும்பத்திற்குள்ளும் பின்பு திருச்சபைக்குள்ளும் கடந்து செல்கிறது.   எழுப்புதலை மூன்று விதமாக நாம் பார்க்கலாம். 👤 தனி நபரின் எழுப்புதல் 👪 குடும்பத்தில் எழுப்புதல ⛪சபையில் எழுப்புதல் 👉 தனி நபரின் எழுப்புதல் என்றால் என்ன?  என்பதை முதலாவது நாம் பார்க்கலாம். தனி நபரின் எழுப்புதல் என்பது, மறுபடியும் பிறந்து, பின்மாற்றம் அடைந்து பாவத்தில் வாழும் ஒரு விசுவாசி பரிசுத்த ஆவியானவரின் தொடுதலால், மீண்டும் கர்த்தரண்டை வந்து அவருக்காய் வாழ்வதாகும்.👉பின் மாற்றம் அடைந்த கிறிஸ்தவனை மீண்டும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அ...
  🔍அசூசா தெரு எழுப்புதல் -  Azusa Street Revival 1906-ம் ஆண்டு, அசூசா தெரு எழுப்புதல் ஏற்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, உலக முழுவதிலும் இருந்து மக்கள் திரண்டு வந்து, ஜெபிக்கவும், கர்த்தரைத் தேடவும், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறவும், அந்நிய பாஷைகளில் ஜெபிக்கவும் தொடங்கினர். அநேக அற்புதங்கள் நடந்தன. விசுவாசிகள் இந்த எழுப்புதல் அக்கினியை தங்கள், தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் சென்றனர், ஆங்கேங்கே பெந்தேகோஸ்தே எழுப்புதல் வேகமாகப் பரவியது. ஆதை தொடர்ந்து சுகமளிக்கும் எழுப்புதல், மற்றும் அநேக தீர்க்கதரிசன ஊழியங்கள், விசுவாச ஊழியங்கள் மூலம் பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் வளர்ச்சி அடைந்தன.  🔍சுகமளிக்கும் எழுப்புதல் 1920-ம் ஆண்டு, அலெக்சாண்டர் டூவி அவர்கள் முலம் ஒரு பெரிய சுகமாளிக்கும் எழுப்புதல் ஏற்ப்பட்டது. இவர் சுகம் அளிக்கும் எழுப்புதலின் தந்தை என்று அழைக்கப்பட்டார். இவர் சீயோன் என்னும் சுகம் அளிக்கும் மையம் ஒன்றை நிறுவினார். இதிலிருந்து மிகவும் பிரசித்தி பெற்ற சுகமளிக்கும் ஊழியர்கள் தோன்றினர். அவர்களில் சிலர் போஸ் டவுன், ஜான ஜி லேக், ரேமான்ட் ரிச்சி, ஸ...
                                    எழுப்புதல் என்றால் என்ன?  என்பதையும், அதை குறித்த , விளக்கங்களையும் கடந்த  அத்தியாயத்தில் பார்த்தோம்.  இந்த  அத்தியாயத்தில் எழுப்புதல்  ஏற்படும்போது நடைபெறும்  விளைவுகள் என்ன? என்பதை சில சரித்திர  உதாரணங்களோடு நாம்  காணலாம். 🌍  வேல்ஸ் தேச எழுப்புதல் (1904 - 05)         ⭐  இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் தேசத்தில் எழுப்புதல் ஏற்பட்ட போது, எழுப்புதல் அடைந்தவர்கள் எங்கும் சென்று பிரசங்கம் செய்தார்கள்.         ⭐   சினிமா, நடன, விளையாட்டு அரங்குகள், மக்கள் செல்லாதால் மூடப்பட்டன.         ⭐ சமுதாயத்தில் குற்றங்கள் குறைந்ததால், காவலருக்கு (Police) வேலையில்லா நிலைமஏற்பட்டது. 🌍 கென்டக்கி எழுப்புதல், அமெரிக்கா (1800)  ⭐  அமெரிக்கா தேசத்தில் உள்ள கென்டக்கியில் எழுப்புதல் ஏற்பட்டபோது அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது. எழு...